இலங்கையில் கைபேசியின் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் நகல்களை பெறுவது எப்படி | Lanka Tamil Net


இலங்கையில் கைபேசியின் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் நகல்களை பெறுவது எப்படி:

இலங்கையில், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் திணைக்களம் (https://online.ebmd.rgd.gov.lk/) மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் நகல்களை இணையதளம் வழியாக பெறலாம்.

தேவையானவை:

  • ஸ்மார்ட்போன்
  • இணைய இணைப்பு
  • தேசிய அடையாள அட்டை (NIC) எண்
  • மின்னஞ்சல் முகவரி
  • கடன் அட்டை (பணம் செலுத்த)

#### 1. இணையதளத்தில் நுழைவு

   - [https://online.ebmd.rgd.gov.lk/](https://online.ebmd.rgd.gov.lk/) எனும் இணையதள முகவரிக்கு சென்று **"சான்றிதழ் கோரிக்கை"** என்பதை கிளிக் செய்யவும்.

#### 2. விவரங்களை நிரப்புதல்

   - **தொலைபேசி இலக்கம்**, **தேசிய அடையாள அட்டை இலக்கம்**, **மின்னஞ்சல்**, **பெயர்** என்பவற்றை நிரப்பி **"PIN ஐ அனுப்புக"** என்பதை கிளிக் செய்யவும்.

   - SMS மூலமாக அனுப்பப்பட்ட PIN ஐ **"PIN ஐ உள்ளிடவும்"** எனும் இடத்தில் உள்ளிடவும்.

#### 3. சான்றிதழ் வகை மற்றும் விநியோயக முறை

   - தொலைபேசி எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின், சான்றிதழின் வகை, விநியோயக முறை என்பவற்றை தெரிவு செய்யவும்.

   - **சான்றிதழின் வகை**: பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் என்பவற்றில் தேவையானதை தெரிவு செய்யவும்.

   - **விநியோயக முறை**: Collect அல்லது Speed Post என்பதைக் கிளிக் செய்யவும்.

#### 4. விநியோயக முறை தேர்வு

   - Collect என்பதைத் தெரிவு செய்தால், சான்றிதழை சேகரிக்க விரும்பும் மாவட்டத்தையும், பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யவும்.

   - Speed Post என்பதைத் தெரிவு செய்தால், சான்றிதழை அனுப்ப வேண்டிய விலாசம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யவும்.

#### 5. சான்றிதழ் தொடர்பான தகவல்களை நிரப்புதல்

   - **பிறப்பு சான்றிதழ்**: சான்றிதழ் இலக்கம், தூதரக பிறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும், பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, பெயர், பால், சான்றிதழ் திருத்தம் தேவைப்பட்டால் அத் திகதி என்பவற்றுடன் சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்யவும்.

   - **திருமண சான்றிதழ்**: சான்றிதழ் இலக்கம், தூதரக திருமண சான்றிதழ் எனின் தூதரகத்தையும், பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, ஆணின் பெயர், பெண்ணின் பெயர், பதிவாளரின் பெயர், பதிவாளர் பிரிவு என்பவற்றுடன் சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்யவும்.

   - **இறப்பு சான்றிதழ்**: சான்றிதழ் இலக்கம், தூதரக இறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும், இறப்பு மாவட்டம், பிரிவு செயலகம், மரணத்தின் பிரிவு செயலகம், பெயர், இறப்பு திகதி, இடம் என்பவற்றுடன் சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்யவும்.

#### 6. தகவல்களை சரிபார்த்து உறுதி செய்தல்

   - வழங்கப்பட்ட தகவல்களை சரிபார்த்து **"உறுதி செய்க"** என்பதை கிளிக் செய்யவும்.

#### 7. கோரிக்கை ID

   - கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், கோரிக்கை ID email மற்றும் SMS மூலம் அனுப்பப்படும். பின் **"சரி"** என்பதை கிளிக் செய்யவும்.

#### 8. பணம் செலுத்தல்

   - கோரிக்கை செயல்படுத்த தொடங்கியவுடன், விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பணம் செலுத்துவதற்கான இணைய முகவரி SMS மற்றும் e-mail மூலம் வழங்கப்படும். அதை கிளிக் செய்யவும்.

   - தேவையான நகல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு **"பணம் செலுத்துக"** என்பதை கிளிக் செய்யவும்.

   - **"ஆம்"** என்பதை கிளிக் செய்து, I Accept என்பதை தெரிவு செய்து Any Visa/Master Card (Paycorp) என்பதை தெரிவு செய்து Proceed என்பதை கிளிக் செய்யவும்.

   - Confirm Payment Details பக்கத்தில் Pay Now என்பதை கிளிக் செய்யவும்.

   - கடனட்டை விபரங்களை உள்ளீடு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

   - கொடுப்பனவு செயப்பட்ட பின், SMS மற்றும் e-mail மூலம் உறுதி செய்யப்படும். பின் **"சரி"** என்பதை கிளிக் செய்யவும்.

இந்த படிகளைக் கடைபிடித்து, பிறப்பு, திருமண, மற்றும் இறப்பு சான்றிதழ் நகல்களை உங்கள் கைபேசியின் மூலமாக வீட்டில் இருந்தபடியே பெற முடியும்.

குறிப்புகள்:

  • நீங்கள் முதல் முறையாக விண்ணப்பிக்கும்போது, ​​சான்றிதழின் அசல் பிரதியை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • சான்றிதழ்கள் பொதுவாக 7-10 வேலை நாட்களுக்குள் வழங்கப்படும்.
  • தபால் மூலம் விநியோகம் செய்யும்போது, ​​கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

**********************************************


How to Get Birth, Marriage and Death Certificate Copies by Mobile in Sri Lanka:

In Sri Lanka, copies of birth, marriage and death certificates can be obtained online through the Department of Home Affairs and District Secretariats (https://online.ebmd.rgd.gov.lk/).

Required:

Smartphone

Internet connection

National Identity Card (NIC) no

e-mail address

Credit Card (Payment)

#### 1. Entry to Website

 - Go to [https://online.ebmd.rgd.gov.lk/](https://online.ebmd.rgd.gov.lk/) and click on **"Certificate Request"**.

#### 2. Filling in details

 - Fill **Phone Number**, **National Identity Card Number**, **Email**, **Name** and click on **"Send PIN"**.

 - Enter the PIN sent via SMS in **"Enter PIN"** field.

#### 3. Type of Certificate and Method of Distribution

 - After the phone number is successfully verified, select the type of certificate, delivery method.

 - **Certificate Type**: Select the required Birth Certificate, Death Certificate, Marriage Certificate.

 - **Delivery Method**: Click Collect or Speed ​​Post.

#### 4. Choice of Distribution Method

 - If you select Collect, select the district and divisional secretariat office where you want to collect the certificate.

 - If you select Speed ​​Post, also select the address, district and divisional secretariat office to which the certificate should be sent.

#### 5. Filling of Certificate related information

 - **BIRTH CERTIFICATE**: Upload a copy of the certificate along with the certificate number, consular birth certificate, registered district, district secretariat, divisional secretariat, date, name, milk, date if certificate correction is required.

 - **MARRIAGE CERTIFICATE**: Upload a copy of the certificate with Certificate Number, Embassy of Consular Marriage Certificate, Registered District, District Secretariat, Divisional Secretariat, Date, Name of Male, Name of Female, Name of Registrar, Division of Registrar.

 - **Death Certificate**: Upload a copy of the certificate with Certificate Number, Embassy of Death Certificate, District of Death, Divisional Secretariat, Divisional Secretariat of Death, Name, Date of Death, Place.

#### 6. Verification and Confirmation of Information

 - Verify the information provided and click **"Confirm"**.

#### 7. Request ID

 - After the request is submitted, the request ID will be sent via email and SMS. Then click **"OK"**.

#### 8. Payment

 - Once the request processing starts, the application will be verified and the payment web address will be provided via SMS and e-mail. Click on it.

 - Specify the number of copies required and click **"Pay"**.

 - Click **"Yes"**, select I Accept, select Any Visa/Master Card (Paycorp) and click Proceed.

 - Click Pay Now on the Confirm Payment Details page.

 - Enter the credit card details and click on Submit.

 - Confirmation will be done via SMS and e-mail after payment is made. Then click **"OK"**.

By following these steps, you can get birth, marriage, and death certificate copies right from the comfort of your home.

Notes:

When you apply for the first time, you need to upload the original copy of the certificate.

Certificates are usually issued within 7-10 working days.

In case of delivery by post, an additional fee is payable.

கருத்துரையிடுக

0 கருத்துகள்