இலங்கை மிகவும் பழமையான நாகரிகத்தின் வரலாற்றைக் கொண்டுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாகரிகத்துடன் முன்னேறிய இலங்கை, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. சுதேசிகள் தமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் புராணக்கதைகள் மூலம் கல்வியை வளர்த்தனர். அவர்கள் சாத்திர சம்பிரதாயங்கள், சடங்காச்சாரங்கள், மருத்துவ முறைகள் போன்றவற்றைத் தாங்கி வளர்ந்தனர். இதனால், இலங்கையின் கல்வி முறை பாரம்பரிய ரீதியாகவும், கலைகள், விஞ்ஞானம், மற்றும் ஆன்மீக ரீதியாகவும் வளமானதாக இருந்தது.
இலங்கை கல்வி பற்றி பொதுவான தகவல்கள
- கட்டாய கல்லி வயதெல்லை - 5 தொடக்கம் 16 வரை
- கல்வி வலையங்கள்- 96
- இலங்கை ஆசிரியர் சேவை ஆரம்பிக்கப்பட்டது: 1994
- கல்வியலுக்காக தனிபீடம் இருக்கும் பல்கலைகழகம்- கொழும்பு
- சார்க் வலைய நாடுகளில் கல்விக்காக அதிகம் நிதி ஒதுக்கும் நாடு- இலங்கை
இலங்கையின் கல்வி முறை மூன்று பிரதான படிநிலைகளைக் கொண்டுள்ளது
பொதுக் கல்வி:
- முன்பள்ளிக் கல்வி: 5 வயதிற்கு முன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி.
- ஆரம்பக் கல்வி: 1-5 ஆம் வகுப்புகள் வரை வழங்கப்படும் அடிப்படை கல்வி.
- கனிட்ட இடைநிலை: 6-9 ஆம் வகுப்புகள் வரை வழங்கப்படும் இடைநிலை கல்வி.
- சிரேட்ட இடைநிலை: 10-13 ஆம் வகுப்புகள் வரை வழங்கப்படும் உயர் இடைநிலை கல்வி.
மூன்றாம் நிலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வி:
- உயர்கல்வி (தொகுதி டிப்ளோமா, பட்டப்படிப்பு, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்).
தொழிற்கல்வி:
- தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு திறன் வளர்ப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வித் திட்டங்கள்.
- இது மாணவர்களுக்கு குறிப்பிட்ட தொழில்களில் தேவையான திறன்களை வழங்குகிறது மற்றும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு தயார்படுத்துகிறது.
பாடசாலை கல்வி பற்றி
- 1945- இலவச கல்வி ஆரம்பிக்கபட்டது.
- 1952- புலமை பரீசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1956- சுய மொழிகள் போதனா மொழியாக்கப்பட்து.
- 1960- பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது
- 1980- இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டது.
- 1993- இலவச சீறுடை வினியோகம்
- 2001- பாடசாலை கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.
உயர்கல்வி பற்றி
- 1893- முதலாவது தொழிநுட்ப கல்லூரி
- 1921- லண்டன் பல்கலைகழக கல்லூரியுடன் இணைந்த வகையில் இலங்கை பல்கலைகழக கல்லூரி உருவாக்கப்பட்டது.
- 1942- இலங்கை பல்கலைகழக கல்லூரியையும், கொழும்பு மருத்துவ கல்லூரியும் இணைத்து இலங்கை பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
- 1978- இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
- 1980- இலங்கையில் திறந்த பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
- 1981-மகாபொல புலமை பரீசில் திட்டம் உருவாக்கப்பட்டது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
செய்திகளை உடனுக்குடன் பெற எமது Whatsapp Group இல் இணைந்து கொள்ள இந்த லிங்கைப் பயன்படுத்துங்கள்
Whatsapp Group
எமது FACEBOOK பக்கத்தை Like / Follow செய்ய இந்த லிங்கைப் பயன்படுத்துங்கள்
0 கருத்துகள்
எமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
https://t.me/LankaTamilNet